இந்தியாவுக்குள் கடந்த ஓராண்டில் மட்டும் 150 முதல் 200 டன் வரை தங்கம் கடத்தி வரப்பட்டிருக்க கூடும் என்றும் இதனால் மத்திய அரசுக்கு 6,200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது.
வரிகள் உள்ளிட்ட வழிகளில் கிடைக்க வேண்டிய வருவாய் கிடைக்காமல் போனதால் இந்த இழப்பு ஏற்பட்டிருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. தங்க இறக்குமதி வரி அதிகரிப்பும் அதன் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுமே கடத்தல் அதிகரிக்கக் காரணம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. தங்க இறக்குமதி கட்டுப்பாடுகளை இந்தாண்டு இறுதி வரை தளர்த்த வாய்ப்பில்லை என மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் ஏற்கனவே கூறியுள்ளார்.
![]()

