அருவி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !

Aruvi Movie

அருவி திரைப்படத்தை பார்த்துவிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் அருண்பிரபுவை தொலைப்பேசியில் அழைத்து ஏற்கனவே பாராட்டியிருந்தார். அதை தொடர்ந்து தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் அருண்பிரபு மற்றும் நாயகி அதீதிபாலனை நேரில் அழைத்து சிறந்த படைப்பை தந்ததற்காக இருவருக்கும் தங்க செயினை பரிசாக அளித்துள்ளார்.

அருவி படத்தின் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரபுவையும் வாழ்த்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவர் என்ன படங்களையெல்லாம் தயாரித்துள்ளார் என்பதை கேட்டுள்ளார். அவர் தேசிய விருது பெற்ற ஜோக்கர் மற்றும் மாநகரம் , தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை தயாரித்துள்ளேன் என்று பதிலளித்த போது. நீங்கள் தயாரித்த எல்லா படங்களையும் நான் பார்த்துவிட்டேன் எல்லா படங்களும் தரமான படங்கள். இதை போன்ற படங்களை தொடர்ந்து தயாரியுங்கள் என்று கூறியுள்ளார்.

இயக்குநர் அருண்பிரபுவிடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் போது :- அருவி ரொம்ப அற்புதமான  படம் , ரொம்ப நல்ல படம் , ரொம்ப அழுதேன் , நிறைய சிரிச்சேன். நான் தனியாக படத்தை பார்க்கும் போது தியேட்டர்-ல உட்கார்ந்து பார்த்த ஒரு பீல் கிடைச்சுது. இந்த படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும். இந்த படத்தை கொடுத்ததற்காக எங்களை போன்ற மக்கள் உங்களுக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும் என்று இயக்குநரை பாராட்டினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இந்த கதையை எங்க இருந்து ஆரம்பிச்சிங்க என்று கேட்டுள்ளார் ?
அருவி திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல வார்த்தையான “ Rolling sir “ என்ற வார்த்தை மூன்று முறை படத்தில் வருவது போல் சத்தமாக கூறி மகிழ்ந்துள்ளார்.
அருவி திரைப்படத்தின் நாயகி அதீதியிடம் :- உங்க நடிப்பு நல்லா இருந்தது நீங்கள் எவ்வளவு எடை குறைத்தீர்கள் என்று கேட்டு பாராட்டியுள்ளார்.

இறுதியில் உங்களை போன்ற ஆட்கள் கண்டிப்பாக ரொம்ப நாள் சினிமாவில் இருக்கணும். படத்துக்கு பொங்கல் வரைக்கும் பப்ளிசிட்டி பண்ணுங்க என்று கூறி வாழ்த்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு