மார்ச் 27, சிட்டகாங்: டி20 உலககோப்பை குரூப் 10 சுற்றில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் இலங்கை அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜெயவர்த்தனே சிறப்பாக ஆடி 89 ரன்களை குவித்தார்.
இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனையடுத்து, இங்கிலாந்து அணி இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்து அணியின் அலக்ஸ் ஹெல்ஸ் அபாரமாக ஆடி சதம் அடித்து அசத்தினார்
![]()

