Aishwarya-Rai-Bachchan-Deep

மும்பை, இணையதளம் மூலம் நடத்திய உலகில் அழகான் பெண்கள் பட்டியலில் இதில் நடிகை ஐஸ்வர்யா ராமற்றும் தீபிகா படுகோனே இடம்பெற்று உள்ளனர். ஹாலிவுட் புஷ் என்ற இணையதளம் மூலம் உலகின் மிகவும் அழகான பெண்கள் 30 பேர் பட்டியலை தேர்வு செய்து வெளியிட்டு உள்ளது

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இத்தாலிய நடிகை மோனிகா பெலுசியும் இரண்டாவது இடத்தில் அமெரிக்க நடிகை கேட் அப்டன் மற்றும் மூன்றாவது ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி நான்காவது இடத்தில் நடிகை ஐஸ்வர்யாராய் உள்ளனர் .தீபிகா படுகேனேவுக்கு 29 வது இடம் கிடைத்து உள்ளது.

பிரபல பாப் பாடகர் ரெஹானாவுக்கு 9 வதி இடமும்,கேத்தி பெர்ரிக்கு 16வது இடமும்,கிம்காதர்சனுக்கு 21 வது இடமும், ஜெசிகா ஆல்பா 27 வது இடமும், அன்ன காத்வேக்கு 28 வது இடமும் கிடைத்து உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள எனது அனைத்து ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.சமீபத்தில் நடந்த கருத்து கணிப்பில் மிக அழகான பெண்களில் இடம் பிடித்தது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.எனது நலம் விருமிகளுக்கு எனக்கு வாக்கு அளித்த ரசிகர்பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்று நடிகை ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

Loading