அழகிரி ஆதரவாளர்கள் சுவரொட்டியால் மதுரையில் பரபரப்பு!?

mka

 

மே18, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக படுதோல்வியடைந்த நிலையில், அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டரால் அக் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்பாக கட்சிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் மு.க.அழகிரி. இதற்குப் பிறகு மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக மு.க.அழகிரி பகிரங்கமாகவே கருத்துத் தெரிவித்தார். மதிமுக, பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களையும் சந்தித்தவர், திமுக படுதோல்வி அடையும் என்றும் கூறினார். அவரது ஆதரவாளர்கள் திமுக வேட்பாளர்களை எதிர்த்து வாக்கு கேட்டனர்.

அழகிரி கூறியதைப் போல் திமுகாவும் படுதோல்வி அடைந்தது.
இத்தகைய சூழலில்தான் அழகிரி ஆதரவாளர்கள் சிலர் மீண்டும் திமுக தலைமையை எதிர்த்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் ஒன்றில், “முற்றிய நெல்லிக்காயும், மூத்தோர் சொல்லும் புளிக்கும்… ஆனால் எதிர்காலத்துக்கு நல்லது’ என்றும் அழகிரியை மூத்தவரே என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

போஸ்டர் வாசகமானது ஸ்டாலினை மறைமுகமாகத் தாக்குவதாக உள்ளது என்பது ஸ்டாலின் ஆதரவாளர்கள் கருத்தாகும். போஸ்டரால் மீண்டும் மதுரை திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு