அழகிரி மகன் தயாரிப்பில் ரஜினிகாந்த்?

alagiri-rajinikanth

மார்ச் 17.முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலருமான மு.க.அழகிரி திடீரென தனது மகனுடன் தனியாகச் சென்று ரஜினியை சமீபத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு அரசியல் வட்டாரம் மட்டுமின்றி சினிமா வட்டாரத்திலும் பரப்பரபாக பேசப்பட்டு வருகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ரஜினிகாந்த் தனது நீண்ட கால நண்பர். அவர் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் நன்றாக இருக்கிறது.

எனவே, அவரை சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்து சொல்லவே வந்தேன். மேலும் தன்னுடைய மகன் அடுத்து எடுக்கப் போகும் படம் குறித்து பேசினேன். மற்றபடி வேறு எந்த அரசியல் பேச்சும் அவரிடம் பேசவில்லை எனவும் கூறியுள்ளார். இருந்தாலும் இந்த சந்திப்பு குறித்து பலவிதமாக பேசப்பட்டுகிறது.

அதிலும் குறிப்பாக, துரை தயாநிதி தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறாரா? என்ற கேள்வியும் கோலிவுட்டில் எழுந்துள்ளது!

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு