Asia Cup 2014 Schedule: Match Time Table with Venue Details

பிப்ரவரி 25: வங்கதேசத்தில் இன்று ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இந்த போட்டியில் பங்கேற்க்கின்றன.

போட்டிகள் ஃபாதுல்லா மற்றும் மிர்பூரில் உள்ள சர்வதேச அரங்கத்தில் நடைபெறவுள்ளன. இதில் அனைத்து போட்டிகளுமே பகல் இரவு போட்டிகள். முதல் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன, இப்போட்டி ஃபாதுல்லாவில் நடைபெறுகிறது. ஆசிய கோப்பைக்கான இறுதி போட்டியானது மார்ச் 8 ஆம் தேதி அன்று மிர்பூரில் நடைபெறும்.

இந்த போட்டிக்கான ஏற்பாடு குறித்து ஆசிய கோப்பை ஏற்பாட்டுக் குழு தலைவரும், வங்கதேச அணியின் முன்னாள் கேப்டனுமான அமினுல் இஸ்லாம் புல்புல் கூறும்போது, இந்த போட்டிகள் அனைத்துமே ஃபதுல்லா மற்றும் மிர்பூரில் இருக்கின்ற சர்வதேச அரங்கத்தில் இடம்பெறுகின்றது. போட்டி நடைபெறும் அரங்குகளை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை அனைத்தையும் செய்துள்ளோம். வீரர்களின் பாதுகாப்பு, பொது மக்களின் பாதுகாப்பு போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளோம். அரசாங்கமும் எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்பாடுகளையும் செய்துள்ளது என்று கூறினார்.

இதற்கிடையே, காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் தோனி போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக விராத் கோஹ்லி கேப்டன் பதவியை ஏற்பார் என கூறப்பட்டுள்ளது. அதே போல வங்கதேச அணிக்கான ஆட்களை தேர்வு செய்யும் போது தன்னை ஆலோசிக்கவில்லை என வங்கதேச அணியின் கேப்டன் முஷிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Asia Cup 2014 schedule

Date

Match

Venue

TIME (IST)

TIME (GMT)

February 25, 2014

Pakistan vs Sri Lanka

Fatullah

14:00

08:00

February 26, 2014

Bangladesh vs India

Fatullah

14:00

08:00

February 27, 2014

Afghanistan vs Pakistan

Fatullah

14:00

08:00

February 28, 2014

India vs Sri Lanka

Fatullah

14:00

08:00

March 1, 2014

Bangladesh vs Afghanistan

Fatullah

14:00

08:00

March 2, 2014

India vs Pakistan

Mirpur

14:00

08:00

March 3, 2014

Afghanistan vs Sri Lanka

Mirpur

14:00

08:00

March 4, 2014

Bangladesh vs Pakistan

Mirpur

14:00

08:00

March 5, 2014

Afghanistan vs India

Mirpur

14:00

08:00

March 6, 2014

Bangladesh vs Sri Lanka

Mirpur

14:00

08:00

March 7, 2014

Final

Mirpur

14:00

08:00

Loading