vijay

புது தில்லியில் ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

இதைத் தொடர்ந்து பிற மாநிலங்களிலும் இக்கட்சி வளர ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் இதன் கிளை துவக்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள். நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் ஆம் ஆத்மிக் கட்சியை பாராட்டி கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர். நடிகை நமீதாவும் பாராட்டினார். அவர் இக்கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வந்தன.

இந்த நிலையில் நடிகர் விஜய்யும் ஆம் ஆத்மி கட்சியில் இணைய முடிவு செய்து இருப்பதாக செய்திகள் பரவி உள்ளன. இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பங்கஜ் குப்தாவிடம் கேட்கப்பட்ட போது யார் வேண்டுமானாலும் எங்கள் கட்சியில் இணையலாம். விஜய்யாக இருந்தாலும் அடிப்படி உறுப்பினரே தவிர அதிகாரங்களுக்கு அனுப்பப்படமாட்டாது. மேலும் ஊழல் “கறை” படியாத கரமாக இருக்க வேண்டும்.

மேலும் விஜய் தரப்பில் எங்கள் கட்சியில் இணைவது குறித்து இதுவரை யாரும் பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

“நாடு நலம்பெறனும்.”

Loading