இந்தியாவுக்கு எதிராக புறக்கணிக்கப்பட்ட வெட்டோரி

daniel-vettori

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் இருந்து நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி புறக்கணிக்கப்பட்டார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர், சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி, கடந்த 1997ல், தனது 18வது வயதில் சர்வதேச டெஸ்டில் பங்கேற்ற இவர், இளம் வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான நியூசிலாந்து வீரர் என்ற பெருமை பெற்றார்.

இதுவரை 112 டெஸ்டில் பங்கேற்றுள்ள இவர், 4516 ஓட்டங்கள், 360 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 300 விக்கெட், 3000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டியிலும் (275 போட்டி, 284 விக்கெட்) சிறப்பாக செயல்பட்டுள்ள இவர், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

முதுகுவலி காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வரும் இவர், தற்போது அவுஸ்திரேலியாவில் நடக்கும் உள்ளூர் ‘டுவென்டி–20’ தொடரான ‘பிக் பாஷ்’ தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக பங்கேற்று வருகிறார். இதில் இரண்டு முறைகளுக்கு மேலாக வெட்டோரி தனது முதுகுவலிக்கு மருந்து எடுத்துக்கொண்டார். இவரை புறக்கணித்ததற்கு இது முக்கிய காரணம் என தெரிகிறது.

By True Tamil

ஜனவரி 14, 2014
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு