மார்ச் 19, ஆண்ட்ராய்டைப் போல் தனது விண்டோஸ் போன் இயங்குதளத்தையும் ஒரு சில போன் உற்பத்தியாளர்களுக்கு இலவசமாக கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரையில் விண்டோஸ் போன் இயங்குதளத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் போன் உற்பத்தியாளர்களுக்கு விலைக்கு தான் கொடுத்து வந்தது.இந்த துறையில் தாமதமாக இறங்கியதாலும்,விலைக்கு விற்பதாலும் விண்டோஸ் போன் இயங்குதளத்தின் பயன்பாடு குறைவாகவே உள்ளது.
இந்நிலையில் விண்டோஸ் போன் பயன்பாட்டை அதிகரிக்க கூகுளின் ஆண்ட்ராய்ட் பாணியைப் பின் பற்ற மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதாவது இனி ஒரு சில போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விண்டோஸ் போன் இயங்குதளத்தை மைரோசாப்ட் இலவசமாக கொடுக்க உள்ளதாம்.இதன் மூலம் விண்டோஸ் போன் இயங்குதள பயன்பாடு அதிகரிக்கும் என்று அந்நிறுவனம் எதிர்பார்க்கின்றது.முதல் கட்டமாக இந்தியாவில் உள்ள ஒரு சில போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விண்டோஸ் போன் இயங்குதளம் இலவசமாக வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் மூலம் விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படும் குறைந்த விலை போன்கள் வெளிவரும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
![]()

