இறந்ததாக கருதப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்தார்! வீடியோ இணைப்பு

an-wakes-up-in-BODY-BAG-as-
மார்ச்2 : இறந்ததாக கருதப்பட்டு சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் எழும்பிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மிசிசிப்பி பகுதியில் வசித்து வந்த வால்பர் வில்லியம்ஸ்(வயது 78) என்பவர் சில தினங்களுக்கு முன் திடீரென்று மூச்சுபேச்சின்றி கிடந்தார்.

உடனே அவர் இறந்துவிட்டதாக கருதிய உறவினர்கள், வால்டரின் உடலை சவப்பெட்டியில் வைத்து ஜிப்பை நன்றாக இழுத்து மூடிவைத்தனர்.

பிறகு இறுதிச்சடங்கு நடக்கும் இடத்துக்கு தூக்கிச்சென்று ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சவப்பைக்குள் இருந்து கையால் குத்துவிடுவதை கவனித்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக பையை திறந்த போது வால்டர் வில்லியம்ஸ் உயிருடன் இருப்பது தெரியவந்தது, அதன்பின் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இச்சம்பவம் பற்றி மருத்துவர் கூறுகையில், இது ஒர் ஆச்சரிய சம்பவம் தான், இவருடைய பேஸ்மேக்கர்(இதய துடிப்பை சீராக இயங்க வைக்கும் சாதனம்) சற்று நின்று விட்டு பிறகு மீண்டும் இயங்கி இயங்கியுள்ளதே குழப்பத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு