
ஜூலை10, பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதற்காக ரூ.486.36 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் முதல் கட்டமாக, கூட்டுறவு நெசவாளர் சங்கங்களுக்கு முன்பணமாக ரூ.240.55 கோடி நிதி விடுவிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து, தமிழக அரசு 9.07.2014 வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் 1982-ஆம் ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் விளைவாக ஏற்பட்ட வறட்சியைத் தொடர்ந்து நிலமற்ற விவசாயிகள் வாழ்வு செழிக்க, இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் இந்தத் திட்டத்துக்கான வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்யும் பொறுப்பு கைத்தறி நெசவாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகளில் பெண்களின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் சேலைகளின் வடிவமைப்பு மற்றும் வண்ணங்களில் மாற்றம் செய்யப்பட்டன. இதற்காக அரசுக்கு ரூ.73.44 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது. மொத்தத்தில், இலவச வேட்டி, சேலை திட்டத்துக்காக ரூ.486.36 கோடி செலவிடப்பட்டது.
சேலைகள் வழங்க. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கும் கடந்த பொங்கலுக்கு அளிக்கப்பட்டதைப் போன்று பாலிகாட் சேலைகளை உற்பத்தி செய்து வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
