இளம் கிரிக்கெட் தலைமுறை ஆலோசகராக சச்சின் நியமனம்

sachin

“அடிடாஸ்’ விளையாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள உன்முக்த் சந்த், பர்வேஸ் ரசூல் உள்ளிட்ட 11 பேர் அடங்கிய இளம் கிரிக்கெட் வீரர்களின் ஆலோசகராக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் ஏற்கெனவே அடிடாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்நிறுவனத்தின் புதிய உறுப்பினர்களில் உன்முக்த் சந்த், பர்வேஸ் ரசூல், விஜய் ஜோல், மனன் வோரா, மன்ப்ரீத் ஜுனெஜா, ருஷ் கலாரியா, சிரக் குராணா, ஆகாஷ்தீப் நாத், விகாஸ் மிஸ்ரா, சர்ஃபராஸ் கான், அபராஜித் பாபா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இது குறித்து சச்சின் கூறுகையில், “எதிர்கால கிரிக்கெட்டுக்கு ஆதரவளிக்கும் சிறந்த முயற்சியை அடிடாஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இது இளம் வீரர்கள் தங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றி விளையாட உறுதுணையாக இருக்கும். இந்த இளம் வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவதன் மூலம் என் இதயத்துக்கு நெருக்கமான ஆட்டத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளேன்’ என்றார்.

By True Tamil

ஜனவரி 21, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு