இளைங்கர்களின் இணைய தளத்திற்கு வயது பத்து!

facebook

வாஷிங்டன்: ஃபேஸ் புக் சமூக இணைய தளம் பத்தாவது ஆண்டை பூர்த்தி செய்துள்ளது.

2004ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் மார்க் சூக்கர்பெர்க் என்பவரால் ஃபேஸ்புக் இணையதள சேவை ஏற்படுத்தப்பட்டது.

இணைய ஊடகத்தில் பல போட்டிகள் இருந்த போதும் ஃபேஸ்புக் இன்னும் பலரது விருப்பத்தை பெற்றுள்ள பக்கமாக இருந்து வருகிறது. முதலில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஒரு தளமாக உருவானது. தற்போது சுமார் 100 கோடி பயனாளர்கள் இந்த வலைதளத்தை பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவராக தன்னை மாற்றிய ஃபேஸ்புக், இந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்று தான் கற்பனைக் கூட செய்ததில்லை என்று மார்க் தெரிவித்துள்ளார்.

மொபைல் சந்தையில் தனது கவனத்தை மந்தமான அளவிலேயே ஃபேஸ்புக் கொண்டிருந்த போதிலும், பாதிக்கும் மேலான தனது விளம்பர வருவாய் மொபைல்களின் மூலம் பெறப்படுவதாக கடந்த வாரம் தெரிவித்துள்ளது. மற்ற சமூக வளைத்தளங்களான பின்ட்ரெஸ்ட், டுவிட்டர், ஸ்னாப்சாட் போன்றவற்றின் வரவால் இளைஞர்களின் இடையே ஃபேஸ்புக்கிற்கான வரவேற்பு குறையும் என்று கருதப்பட்டது.

By True Tamil

பிப்ரவரி 4, 2014
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு