இளையராஜா யுவன் மோதல?

Yuvan Shankar Raja converts to Islam

மார்ச் 13, தந்தை இளையராஜாவுடன் மனஸ்தாபம் என்ற தகவலால் பதற்றம் அடைந்தார் யுவன் ஷங்கர் ராஜா. இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா. சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதனால் இளையராஜாவுக்கும், அவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதையறிந்து பதற்றம் அடைந்த யுவன் தனது இணைய பக்கத்தில் கூறுகையில், நான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன். அதற்காக பெருமைப்படுகிறேன். இந்த முடிவுக்கு என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக உள்ளனர். எனக்கும் என் அப்பா இளையராஜாவுக்கும் இடையே எந்த கருத்துவேறுபாடும் இல்லை என¢றார். யுவன் பற்றி அவரது நண்பர்கள் கூறும்போது,யுவன் தனது தாய் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்.

அவர் இறந்ததை பெரிய இழப்பாக எண்ணினார். பிறகு சமய குரு ஒருவரை சந்தித்தார். ஆனால் யுவன் இஸ்லாம் மதத்துக்கு மாறியதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இந்த விஷயத்தில் அவர் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. கடந்த ஒரு வருடமாக அவர் இஸ்லாத்தை பின்பற்றி வருகிறார். ஒவ்வொரு நாளும் தினமும் 5 வேளை தொழுகை செய்கிறார்.

ஸ்டுடியோவில் இருக்கும்போதும் இதற்காக தனியாக நேரம் ஒதுக்கி பிரார்த்தனை செய்கிறார். விரைவில் தனது பெயரையும் அவர் மாற்றிக்கொள்ள உள்ளார். இது அவருடைய சொந்த விருப்பம்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு