தமிழ் சினிமாவின் தற்போது தொடர் வெற்றிகளை குவித்து வரும் சிவகார்த்திகேயன் ‘காக்கி சட்டை’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். இப்படத்தை தொடர்ந்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரஜினி முருகன் என்கிற படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது நமக்கு தெரியும். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க லக்ஷ்மி மேனன், தமன்னா ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இறுதியில் இப்போது மலையாள நடிகை கீர்த்தி சுரேஷை நாயகியாக தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் ‘மானே தேனே பேயே’ என்ற படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இதில் படத்தில் இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி பவர்ஃபுல் வில்லன் கேர்கடரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ராஜ்கிரணும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறாராம். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்கு இசையமைத்த டி.இமான் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்படிப்பு நவம்பர் மாத இறுதியில் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளதாம்.
![]()

