ஜூன் 24, சதாம் உசேன் ஆட்சியை கீழிறக்கி அவரை தூக்கிலிட காரணமாய் இருந்தது அமெரிக்கா. ஆனாலும் அங்கு உசேன் ஆட்சிக்குப் பிறகு மதக்கலவரமாக மாறக்கூடிய ஓர் செயலை அமெரிக்கா செய்திருந்தது. அதாவது சன்னி இனத்தைச் சேர்ந்த சதாம் இறப்பிற்கு பிறகான ஆட்சியில் ஷியா பிரிவை சேர்ந்த ஒருவரை தலைவராக்கி விட்டிருந்தது. இதுவே சன்னி இன மக்களிடம் மன வேறுபாட்டை உருவாக்கி தற்போதைய ஷியா பிரிவு ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்களாக (தீவிரவாதிகளாக) உருவெடுக்கச் செய்துள்ளது.
ஈராக்கின் முன்னாள் சர்வாதிகாரி, அதிபர் சதாம் உசேனை தூக்கிலிட உத்தரவிட்ட நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மானை பழிவாங்கும் விதமாக, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர் என்று அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிபதி ரவூப் அப்துல் கடந்த 16ம் தேதி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சதாம் ஹுசைனின் முக்கிய உதவியாளராக இருந்த இப்ராஹீம் அல் டௌரியின் இணையதளத் தகவல் தெரிவிக்கின்றது. ஆனால் அரசு இதனை உறுதி படுத்தவில்லை. செய்தி இணைய தளங்கள் மற்றும் சமூக இணைய தளங்களில் இது தொடர்பான தகவல்கள் அங்கு இருந்து வெளியாகியுள்ளது.
![]()

