உலகத் தமிழர்கல் எதிர்பார்க்கும் வைகோவின் 3ம் நிலை!?

vaiko222

மே16, விருதுநகர் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட வைகோ தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

விருதுநகர் மக்களவை தொகுதியில் பா.ஜ.க கூட்டணியின் சார்பில் மதிமுக வேட்பாளராக வைகோ போட்டியிட்டார். அதனால் இத்தொகுதி வி.ஐ.பி அந்தஸ்தை பெற்றது என்பதால் இவரது வெற்றியை உலக தமிழர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இவருக்காக பா.ஜ.காவின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், தமிழருவிமணியன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, தமிழ் ஆர்வலர்கள, வழக்குரைஞர் அணியினர், மாணவரணியினர் உள்ளிட்ட பல்வேறு அணியினர் தீவிர களப்பணியாற்றினர்.

அதனால், இவரது வெற்றியை அனைவரும் எதிர்ப்பார்த்து இருந்தனர். இந்த நிலையில், இரண்டு சுற்றிலும் மதிமுக வேட்பாளர் வைகோ மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து 3-வது சுற்று வாக்குகள் எண்ணிக்கை மும்முரமாக நடந்து வருகிறது. இதிலும் அதிமுகவே முன்னணி வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவு செய்திகளுக்கு தொடர்ந்து www.truetamil.in எங்களோடு தொடர்பில் இருங்கள்….

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு