tsetc

தமிழ்நாடு விரைவு பேருந்து போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பயணித்துக்கொண்டிருக்கும் அரசு பேருந்து சிறந்த முறையில் இயங்குவதாக சொல்லிகொண்டிருக்கும் வேளையில் ஒருமுக்கிய தகவல்:-

நம்மில் பலர் இன்று அவசர வேலைகளை சுமந்து அடித்து பிடித்து பயணம் செய்து கொண்டிருக்கிறோம். அப்படியாக இருக்கும் வேளையில் நாம் இழக்கும் பல ரூபாய்களையும், அவமரியாதைகளையும், பொருட்படுத்துவது இல்லை. அதற்கு காரணம் நாம் ஏற்றிருக்கும் பணியும் அதற்கான அவசரமும்.

நாம் ஏமாற்றப்படுவது இப்படியா!

1. தஞ்சாவூரில் பேருந்தில் ஏறி அமர்ந்து கும்பகோணம் நெருங்கும் சமயத்தில் பேருந்து நடத்துனர் நமக்கு அருகில் வந்து டிக்கெட் எடுக்கச் சொல்ல அரைத் தூக்கத்தில் இருக்கும் நாம் தொகையை செலுத்த மீதித் தொகையை வந்து தருவதாக கூறிச் செல்லுவார் நடத்துனர். அரைத் தூக்கத்தில் இருந்த நாம் தூங்கிவிட்டோமா, அவர் மறந்துவிட்டாரா என்பது ஒருபுறமிருக்க இறங்கும் இடத்தில் சில்லறை கேட்க இல்லை என்ற பதில் வரும் அல்லது காதில் விழாததுபோல் இருப்பார்.

அதிகாலை சங்கடங்களை தவிர்க்க நாம் ஏமாற்றத்தோடு இறங்க வேண்டிய சூழலைத்தவிர வேறு வழி இல்லை! நமக்கு பின் இறந்குபவரும் ஏமாற்றத்திற்கு துணை தேடுபவராய் நம் முகத்தை பார்த்தவாறே இறங்க என்ன செய்ய! எனும் பாணியில் பயணம் தொடரும்!
2. பயண நேர பதட்டத்தை தவிர்க்கவும், அசம்பாவிதங்களை குறைக்கவும் போக்குவரத்து கழகத்தால் ஏற்படுத்தப் பட்டதே முன் பதிவு வசதி. இதில் எல்லோருக்கும் பயணத் தேதி முன்கூட்டியே தெரிவதற்கில்லை! ஆகவே பேருந்து நிலையத்தில் முன்னாடி வந்தவருக்கான முன் பதிவாக ஒரு டோக்கன் வழங்கப்படும். ஆனால் இரவு 2 மணிக்கு எந்த கூட்டமும் இல்லாத சமயத்திலும் நடத்துனர் இதை வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அலுவலரும் இதை நம்மிடம் கொடுத்து 10 ரூபாய் பெற்று கொள்கிறார். ஆக கூட்டமே இல்லாத இரவு 2 மணிக்கும் கட்டாய விற்பனை நடக்கிறது.

3. இரவுப் பயணத்தின் போது எங்கேனும் நிறுத்த மாட்டார்களா என்கிற ரீதியில் நாம் இருக்க, நடு நிசியில் ஓரிடத்தில் நிறுத்தப்படுகிறது பேருந்து. பெருமூச்சு விடும் பாணியில் இறங்கும் போதே வழிமுறைபடுத்துகிறது ஒரு கட்டாய கும்பல். எட்ட நிற்கும் போதே நோய்பிடிக்கும் கழிவறைக்குள் 5 ரூபாய் கொடுத்து மூச்சுமுட்ட வெளிவருகிறான் தமிழன்.

4. அவ்விடத்திலேயே டீ, பால், பன்னு என அனைத்தும் கிடைக்க இரவுப் பசியில் சொர்கத்தை கண்டதாக எண்ணிவிடுகிறான் தமிழன். உண்டு முடித்தபிறகு அநியாய காசுகொடுத்து கண்ணீர்விட்டு திரும்புகையில் பீடி சிகரெட் இனாமோடு பல்லிளித்து வருகிறார்கள் நடத்துனரும் ஓட்டுனரும்.

Loading