ஜூலை 26, மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற காங்கிரஸ் கட்சிக்கு தகுதியில்லை என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி விளக்கம் அளித்துள்ளார்.
மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களில் 10 சதவீத தொகுதிகளை அதாவது 55 தொகுதிகளை பெறும் கட்சிக்குத்தான் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படும். ஆனால் காங்கிரஸ் வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால் அதற்கு எதிர்க்கட்சி பதவி தரப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், சட்ட நிபுணர்களின் கருத்தினைக் கேட்க முடிவு செய்து, அட்டர்னி ஜெனரல் முகுல் முகுல் ரோஹத்கியிடம் கருத்துக் கேட்டிருந்தார்.
இதற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள முகுல் , 543 இடங்களில் 10 சதவீத தொகுதிகளை அதாவது 55 தொகுதிகளை பெறும் கட்சிக்குத்தான் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படும். ஆனால் காங்கிரஸ் வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், அதற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுவதற்கான தகுதி இல்லை.
மேலும், 10 சதவீத இடங்களை பெறாத ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கியதாக மக்களவையில் இதுவரை எந்த முன்னுதாரணமும் இல்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற வகையில் எடுத்துக் கொண்டால் 60 எம்.பிக்கள் இருந்தாலும், அதுபோல ஒரு கூட்டணி கட்சியை அடிப்படையாக வைத்து எதிர்க்கட்சி பதவி வழங்கியதாகவும் எந்த முன்னுதாரணமும் இல்லை. எனவே, காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சி அந்தஸ்து கோரிக்கை தகுதியில்லாதது என்று கருத்துக் கூறியுள்ளார்.
![]()

