இங்கிலாந்தில் இளம் பெண் ஒருவர் தனது ஐ போனுக்கு சார்ச் போட்டுவிட்டு அதனை மார்பில் வைத்து அப்படியே தூங்கியதால் விபரீதம் ஏற்பட்டுள்ளது.
டியோனே பாக்ஸ்டர்(வயது 24). என்ற இளம் பெண் “ஐ” போன் பிரியை, தனது ஆப்பிள் ஐ போனை தூங்கும்போது உடன் வைத்துக்கொண்டே தூங்குவார்..
சம்பவத்தன்று இரவு தனது ஐ-போனை சார்ஜ் ஏற்றிய டியோனே பாக்ஸ்டர் படுக்கையில் படுத்தப்படி சார்ஜ் போட்டு விட்டு அதனை தனது மார்பில் வைத்தப்படி அப்படியே தூங்கிவிட்டார். நீண்ட நேரம் சார்ஜ் ஏறியபின் அதிக வெப்பம் அடைந்த ஐ போனால் அவரது மார்பில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயத்தால் அலறிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் தேறிவருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
![]()

