ஜூலை15, ஒருதலை ராகம்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நடிகர் சங்கர். தமிழ், மலையாளம் என்று 120க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார். ‘ஒருதலை ராகம்’ சங்கர் என அறியப்பட்ட இவர் தமிழில் இயக்கியுள்ள படம் ‘மணல் நகரம்’ இவர் ஏற்கெனவே மலையாளத்தில் படம் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நேற்று ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடந்தது. இந்த விழாவில், தான் அறிமுகமான ஒரு தலை ராகம் படக்குழுவினரை அழைத்திருந்தார் சங்கர். கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் குழு சந்தித்துக் கொண்டது சுவாரஸ்ய நிகழ்வாக அமைந்திருந்தது.
அங்கே நடந்த மற்றுமொரு முக்கிய நிகழ்வு கீழே :-
பொதுவாக தனது படங்களில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் மற்ற பெண்களைத் தொட்டுப் பேசக் கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்து வருபவர் டி.ஆர்.
அவரது படத்தில் நடித்திருந்தும் கூட 34 வருடங்கள் ஆகி விட்டதால் அதனை மறந்து விட்டார் போலும் ரூபா. மற்றவர்களைப் போலவே மேடை ஏறியதும் டி.ஆரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே கை குலுக்க கையை நீட்டினார்.ஆனால், டி.ஆரோ தனது இரு கைகளையும் கூப்பி பதிலுக்கு அவருக்கு வணக்கம் கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரூபா, அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே தனது கைகளைப் பின்னால் இழுத்துக் கொண்டார்.
![]()


