மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘திரிஷ்யம்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் ரீமேக் ஆகிறது.
தமிழ் பதிப்பில் கமலஹாசனும், தெலுங்கில் வெங்கடேசும் நடிக்கின்றனர்.
கமலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடக்கிறது. மீனாவே தமிழிலும் நடிப்பார் என தகவல் வெளியானது. தற்போது நதியா பெயரும் அடிபடுகிறது.
மலையாளத்தில் ‘ஒரிஜினல்’ படத்தில் மீனா நடித்து விட்டதால் அவரை தமிழ் ரீமேக்கில் நடிக்க வைக்க ஆட்சேபனை கிளப்பப்படுகிறதாம். மீனா ஏற்கனவே அவ்வை சண்முகியில் கமல் ஜோடியாக நடித்துள்ளார். நதியா இதுவரை கமலுடன் நடிக்கவில்லை. எனவே நதியாவுக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக மீனாவே நடிப்பார் என கூறப்படுகிறது. போலீஸ் ஐ.ஜி.கேரக்டருக்கு நதியாவை பரிசீலிக்கின்றனர்.
திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீது ஜோசப்பே தமிழ் பதிப்பையும் டைரக்டு செய்கிறார். ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.
![]()

