பிப்ரவரி 25: கன்னட திரையுலகின் பிரபல நடிகரும், கர்நாடக வீட்டுவசதித்துறை அமைச்சருமான அம்பரீஷ் (62) திடீர் மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நடிகர் அம்பரீஷ் உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் உடல் நலம் குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.
கடந்த வெள்ளிக் கிழமை இரவு அம்பரீஷுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவரது வீட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவருடைய குடும்பத்தார் பெங்களூர் மில்லர்ஸ் சாலையில் உள்ள விக்ரம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக விக்ரம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சதீஷ் கூறியதாவது: அம்பரீஷ் அவருடைய கல்லீரலில் ஏற்பட்டிருந்த அடைப்பு விரைவில் நீக்க இருக்கிறோம். இதன் பிறகு அவர் உடல்நிலை தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைவார் என்றும் கூறினார்.
அம்பரீஷுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட தகவல் வேகமாக பரவியது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை நள்ளிரவில் முதல் அவரது ரசிகர்கள் மருத்துவமனை பகுதியில் குவிந்தனர். உடனடியாக மில்லர்ஸ் சாலை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
![]()

