காங்கிரசைப் போல பிஜேபியும் மக்களால் தூக்கி எறியப்படும்! – பழ. நெடுமாறன் எச்சரிக்கை!

pazha2

 

ஜூலை17, ஈழத் தமிழர் பிரச்னை, காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை போன்ற பிரச்னைகளில் முந்தையை காங்கிரஸ் அரசின் கொள்கைகளையே பாஜக அரசும் பின்பற்றுகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் காங்கிரசை போல, பாஜகவையும் மக்கள் புறக்கணிப்பார்கள். இதனை பாஜக தலைவர்கள் உணர வேண்டும்.

ஈழத் தமிழர் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளில் நியாயம் கிடைக்க வேண்டுமானால், மத்திய அரசை நம்பி பலனில்லை. தமிழர்கள் ஒன்றுபட்டுப் போராடினால்தான் தீர்வு கிடைக்கும்.

இலங்கைக்கு கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு இதுவரை இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவில்லை. எனவே, கச்சத் தீவு ஒப்பந்தம் செல்லாது.

தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்பில் வேட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. வேட்டிக்கு அனுமதி மறுக்கும் கிளப்புகளுக்கு தடை விதிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.

ஆளுநர் பதவி என்பதே தேவையற்றது. அப்படி தேவை எனில் மாநில சட்டப்பேரவைகள் மூலம் ஆளுநர்களை நியமிக்க வேண்டும்.

தமிழர்களுக்காக குரல் கொடுக்க, அவர்களின் பிரச்னைகளுக்காக போராட தமிழர் தேசிய முன்னணி என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளோம். தமிழ்த் தேசியத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் இதில் இணையலாம் என்று நேற்று பத்திரிகையாளர்கள் மன்றத்தில் நடந்த சந்திப்பில் பேசினார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு