germany

ஜூலை15, 20-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கடந்த மாதம் 12-ந்தேதி பிரேசிலில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனியும், அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. ரியோடி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

ஜெர்மனியின் 22 வயது இளம் வீரர் மரியோ கோட்ஸே 113-வது நிமிடத்தில் கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். இதன் மூலம் சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனி மீண்டும் உலக சாம்பியன் ஆனது. அந்த அணிக்கு ரூ.210 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது

germ-banner

இந்நிலையில் வெற்றிக்கோப்பையுடன் ஜெர்மனி வீரர்கள் இன்று நாடு திரும்பினர். ரியோ டி ஜெனிரோவில் இருந்து பெர்லின் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜெர்மனி 4-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.. இந்த வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

germ-players

மேலும் வெற்றிக் கோப்பையுடன் வரும் வீரர்களை வரவேற்க இன்று காலை முதலே ரசிகர்கள் திரண்டு வர ஆரம்பித்தனர். பிரண்டன்பர்க் கேட்டில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டதால் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தன.

germ-audi

பின்னர் வெளியில் வந்தபோது, விமான நிலையத்தின் வெளியில் வெள்ளமென திரண்டிருந்த மக்கள் வீரர்களை வாழ்த்தி கோஷமிட்டு அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்த்துகளைத் தெரிவித்துகொண்டனர்.

 

Loading