காவல் ஆணையரிடம் கவுண்டமணி திடீர் புகார்!

goundamani

சினிமா : சமூக ஊடகங்களில் தான் இறந்ததாக வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் திரைப்பட நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சார்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கவுண்டமணியின் வழக்குரைஞர் கே.சசிக்குமார், சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அளித்த மனு:- கவுண்டமணி கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் இறந்துவிட்டதாக சில நாள்களாக சமூக ஊடகங்களில் வதந்தி திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. இந்தத் தகவலை பார்த்து கவுண்டமணியின் நண்பர்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இதனால் கவுண்டமணியும், அவர் குடும்பத்தினரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே காவல்துறை இப்படிப்பட்ட வதந்திகளை தடுக்க வேண்டும். மேலும் இந்த வதந்தியை பரப்புவோர் மீது மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு