கிரிக்கெட் வீரர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

afghanistan

ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் வீரர்கள் மீது மர்ம மனிதர்கள் திடீரென தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் லஹ்மன் மாகாணத்தில் உள்ள அலிங்கர் மாவட்டத்தில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியை எடுத்து கிரிக்கெட் வீரர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர், இதில் 5 வீரர்கள் பரிதாபமாக பலியாயினர் என லஹ்மன் மாகாண செய்தி தொடர்பாளர் சர்ஹாதீ தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தாக்குதலுக்கு இதுவரையிலும் எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் தலிபான் தீவிரவாதிகளின் வேலையாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By True Tamil

ஜனவரி 24, 2014
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு