
புலவர் புலமைப்பித்தனின் பேரன் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘எவன்’. அவருக்கு ஜோடியாக தீப்தி நடித்துள்ளார். இப்படத்தை இயக்குகிறார் இயக்குனர் துரைமுருகன். இவர் கருப்பசாமி குத்தகைகாரர், கோலி சோடா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.
இப்படத்தில் வருகிற ஒரு முக்கிய காட்சியில் படத்தின் கதாநாயகி ‘தீப்தி மானே’ காட்சியின் தன்மை புரிந்து கிளிசரின் இல்லாமல், இயற்கையாகவே கண் கலங்கி படக் குழுவினர் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()
