குழப்பத்தை ஏற்படுத்தும் அஞ்சான் சூர்யாவும் – அனேகன் தனுஷும் ?

anekan-anjan

மே1,

சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் அஞ்சான் படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார்.

சமந்தா நாயகியாக நடிக்க இதன் படபிடிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது. குறிப்பாக சமந்தா காட்சிகள் வேகமாக படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி படத்தை வெளியிட
படக் குழு படுவேகமாக சுழன்றுக்கொண்டிருக்கிறது.

இதனிடையே படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்” மே 1ம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு நாள் முன்பாக அதாவது நேற்றே படத்தின் டைட்டில் லோகோ வெளியிடப்பட்டது. இதுவும் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஆனால் அதுவல்ல செய்தி. “அனேகன்” படத்தின் டைட்டில் வடிவம் போன்றே ”அஞ்சான்” பட தலைப்பு வடிவமும் உள்ளது. இரண்டு தலைப்பு வடிவமும் ஒரே மாதிரியாக இருப்பதால் இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம்தான் “அனேகன்”. இந்தப் படத்தின் டைட்டில் வடிவம் சில மாதங்களுக்கு முன்பே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு