ais0

கேன்ஸ் திரைப்பட விழாவில் லாரியஸ் பிராண்ட் அம்பாசிடரான ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளாக கலந்து கொண்டு வருகிறார். இந்த ஆண்டு அவர் தங்க நிற கவுன் அணிந்து கேன்ஸ் விழாவுக்கு சென்றார்.

பாரிஸ் அமைப்பின் தூதுவராக உள்ள பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், கேன்ஸ் திரைப்பட விழாவின் 7ம் நாளில் சிவப்புக் கம்பள வரவேற்பு பெற்றார்.

இவர் ஒவ்வொருமுறை கேன்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொள்ளும் பொழுதும் பறக்கும் முத்தம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்தமுறையும் தவறாமல் முத்தங்களை பறக்கவிட்டார்.

ais1

அதோடு ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த விலை உயர்ந்த கை வைக்காத கவுன் மாடல் உடை, அவரது சிவப்பு லிப்ஸ்டிக் மேக்கப், கண்களில் புருவத்துக்கு திருத்தமாக ஐ-லைன் செய்து கொண்டு அவர் சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்தது, அங்கிருந்த புகைப்படக் கலைஞர்களைப் பரவசப்படுத்தியது. வெளிநாட்டுப் புகைப்படக் கலைஞர்கள் ஐஸ்வர்யா ராய் பச்சனின் ஒய்யார நடையை தங்கள் கேமிராவுக்குள் சிறைப்படுத்திக் கொண்டனர்.

ais2

 

ais01

 

அவர் மே 21ம் தேதி இன்றும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பளத்தில் நடந்து செல்கிறார். 13வது சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழா பலரது கவனத்தையும் இப்போது ஈர்த்து வருகிறது.

Loading