கோச்சடையான்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

kochadaiyaan

மார்ச் 21, ரஜினிகாந்த், தீபிகா படுகோன், ஷோபனா, நாசர், சரத்குமார், ஆதி மற்றும் பலர் நடித்த படம் ‘கோச்சடையான்‘.

இப்படத்தின் மூலம் ரஜினியின் மகள் செளந்தர்யா இயக்குனராக அறிமுகமாகிறார். படத்தின் கதை–திரைக்கதை–வசனத்தை கே.எஸ்.ரவிகுமார் எழுதியிருக்கிறார். கவிஞர்கள் வாலி, வைரமுத்து ஆகிய இருவரும் எழுதிய பாடல்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார்.

இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பட வெளியீட்டுக்காக அனைவரும் காத்திருக்கும் நிலையில், படம் தணிக்கைத் துறையின் சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது.

இந்நிலையில் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் படத்திற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழும்படியான யு சான்றிதழை வழங்கியுள்ளனர். படத்தை அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர்.

ஆனால் அந்த சமயத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ரிலீஸ் தேதியை மேலும் தள்ளி வைக்கலாமா என்று யோசித்து வருகின்றனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு