சங்ககாரா சதத்தினால் வென்றது இலங்கை!

 Sangakkara ton puts SL ahead

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றை ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி நிதமான ஆடத்தொடங்கியது.

இந்திய அணி 33 ரன்கள் எடுத்திருந்த போது ரோகித் சர்மா செனன்யாகே பந்து வீச்சில் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். இதனை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் கோலி தவானுடன் இணைந்த சிறப்பாக ஆடினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் கோலி (48 ரன்கள்)மென்டிஸ் பந்தில் போல்டாகி வெளியேறினார்.

இதனை தொட்ந்து வந்த ரகானே தினேஸ் கார்த்திக்கும் நிலைத்து நின்று ஆடவில்லை. இந்நிலையில் சிறப்பாக ஆடிவந்த தவான் 94 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மெண்டிஸ் பந்தை அடித்து ஆட முயன்றபோது போல்டாகி வெளியேறினார்.

இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் சிறப்பாக பந்து வீசிய மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும். சென்னேநாயகே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்த ஆடிய இலங்கை சங்ககாரா சதத்தின் உதவியுடன் 49.2 ஓவரில் இந்தியாவை வீழ்த்தியது. இந்தியா தரப்பில் சாமி , ஜடேஜா தலா 3 விக்கட்களையும் அஸ்வின் 2 விக்கட்களையும் வீழ்த்தினர்.

சங்ககாரா ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு