சன் குழும ‘கல்’ கேபிள்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விட்டல் சம்பத்குமரன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
எங்களது ‘கல்’ கேபிள்ஸ் நிறுவனம் தொலைக்காட்சி சேனல்களை டிஜிட்டல் முறையில் சென்னை, கோவை உள்பட பல பகுதிகளில் எம்எஸ்ஓ மூலம் ஒளிபரப்பி வருகிறது. இதற்காக மத்திய தகவல்
ஒளிபரப்புத் துறை உரிமம் வழங்கியுள்ளது.
இந்த உரிமத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து பாதுகாப்பு ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டது.
அதுதொடர்பாக எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஒப்புதல் வழங்கவில்லை என்று கூறி சென்னை, கோவை ஆகிய நகரங்களின் எம்எஸ்ஓ உரிமத்தை கடந்த 20-ஆம் தேதி மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு உத்தரவின் ஒரு பகுதிக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜரானார்.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இது ஒருபுறமிருக்க ஏர்செல்-மேக்சிஸ் நிறுவன வழக்கு என்னவாயிருக்கும்!?
![]()

