சர்ச்சையில் கமலின் உத்தம வில்லன்!

Kamal Haasan's 'Uthama Villain' First Look Revealed, Official Teaser Released

மார்ச்05:’விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஸ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகிறது. இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரானே இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதையை கமல் ஹாசனே எழுதியிருக்க, ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் சங்கர் எடிட்டிங் செய்கிறார்.

தற்போது படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் போஸ்டர் வெளியான அன்றே சர்ச்சையும் சேர்ந்து வந்துவிட்டது. உத்தம வில்லன் முதல் போஸ்டர், வேறொரு புகழ் பெற்ற பிரான்சு நாட்டை சேர்ந்த எரிக் லபோர்க் என்ற புகைப்படக்காரரின் புகைப்படம் போலவே உள்ளது என்கிற தகவலும் இப்போது வெளியாகியுள்ளது.

சர்ச்சையில் கமலின் உத்தம வில்லன்!

பிரான்சைச் சேர்ந்த பிரபல புகைப்படக்காரரான எரிக் லபோர்க் அந்தப் படத்தை 2009-ல் தனது கேரளா சுற்றுப் பயணத்தின் போது எடுத்துள்ளார். அந்தப் புகைப்படத்தை காப்பியடித்துதான் கமல் உத்தம வில்லன் படத்தில் தனது கெட்டப்பை வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு