சினிமா டு ஹோம்’ நிறுவனம் மூலம் வீட்டிற்கு வரும் சினிமா!- இயக்குனர் சேரன்!

cheran

 

ஜூலை15, டி.வி.டி., டி.டி.எச், இணையதளம், செட்ஆஃப் பாக்ஸ் உள்ளிட்ட வழிகளில் வீடுதோறும் சினிமாவை எடுத்துச் செல்லும் “சினிமா டு ஹோம்’ என்ற புதிய நிறுவனத்தை இயக்குநர் சேரன் தொடங்கினார்.

5 ஆண்டுகளுக்கு முன் இருந்த சினிமாவின் நிலைமை தற்போது மாறியுள்ளது. இதற்கு நாளுக்கு நாள் மாறி வரும் மக்களின் ரசனை மாற்றங்கள், தொழில் நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி ஆகியவையே காரணம். இதனால் கோடம்பாக்கத்தில் கனவுகளுடன் திரிந்து கொண்டிருப்பவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

சிறிய திரைப்படங்களை குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிட்டு அதே நாளில் மற்ற தளங்களில் எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதே “சினிமா டு ஹோம்’ நிறுவனத்தின் நோக்கம். இந்நிறுவனம் ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும், ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு மாற்று வியாபாரத் தளமாக இயங்கும். தரமான படங்களை இந்நிறுவனத்தின் மூலம் வெளியே கொண்டு வருவோம். தவறான முறையில் படங்களை பதிவிறக்கம் செய்வோர், பதிவு செய்வோர் ஆகியோரைக் கண்காணிக்க குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம். இதில் 7,000 தொழிலாளர்கள் பணிபுரிய இருக்கிறார்கள் என்றார் சேரன்.

விழாவில் சேரனின் இந்த புது முயற்சிக்கு நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், சீமான், அமீர் உள்ளிட்ட திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துப் பேசினர்.

 

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு