சுரேஷ் ரெய்னாவுக்கு என்னாச்சு?

suresh-raina

தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்தை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் சுரேஷ் ரெய்னா சோபிக்காமல் போனது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்கள் வீராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் கோஹ்லி, ஆனால் இந்திய அணியில் 8 ஆண்டுகளாக விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா ஒருநாள் போட்டிகளில் ஓட்டங்கள் குவிக்க முடியாமல் திணறுவதை நேற்றைய போட்டியிலும் பார்க்க முடிந்தது.

என்னதான் அணித்தலைவர் டோனி மற்றும் தெரிவுக் குழுவின் ஆதரவு இருந்தாலும் இப்படி விளையாடிக் கொண்டிருந்தால் அணியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைதான் ஏற்படும்.

கடந்த 10 போட்டிகளில் அதிகபட்ச ஓட்டங்கள் 39 தான், நேற்றைய போட்டியிலும் கூட 18 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

கடந்த ஜூன் மாதம் முதல் 28 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் ரெய்னா 462 ஓட்டங்களை எடுத்திருக்கிறார்.

மொத்தமாக 187 ஒருநாள் போட்டிகளில், 4530 ஓட்டங்களை குவித்திருக்கிறார்.

இப்படியே ஆடிக் கொண்டிருந்தால் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அணியில் இடம்பெறுவது சந்தேகம் தான்.

By True Tamil

ஜனவரி 20, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு