சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரட்டை குண்டு வெடிப்பு! பாதுகாப்பு வலையத்திற்குள் சென்னை! ஒருவரை கைது செய்து தீவிர விசாரணை!

che-central

 

மே 1, சென்னையில் இன்று அதிகாலை கவுகாத்தியிலிருந்து பெங்களூர் செல்வதற்காக சென்னை சென்ட்ரல் வந்து நின்ற கவுகாத்தி விரைவு ரயிலில் எஸ்4, எஸ் 5, பெட்டிகளில் பயங்கர சத்தத்துடன் கூடிய இரண்டு குண்டுகள் வெடித்துள்ளது.

இதில் விரைவாக செயல்பட்டு காவல் துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் குண்டு வெடிப்பிற்கு பிறகு உள்ளிருந்த பயணிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கின்றனர்.
வெளியிலிருந்து இதுவரை யாரையும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஒருவர் கழிவறையில் சந்தேகத்திற்கு இடமாக பதுங்கியிருந்தவரை காவல்த் துறை கைது செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் இறப்பிற்கு ஒரு லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி மற்றும் மயிலாடுதுறை போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று பேருந்து பயணிகள், ரயில் பயணிகள், விமான பயணிகள் அனைவரும் இந்த பாதுகாப்பு சேவைக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பாதுகாப்பு குறித்த முக்கிய தகவல்களுக்கு மக்கள் சேவைக்கு மட்டும் இந்த தொலைபேசியை அணுகவும்:- 044-25357398.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு