சென்னை பெண்கள் உடல் தெரியும்படி உடை அணிவதில்லை: மத்திய பிரதேச அமைச்சர்

Babulal-Gaur

சென்னையில் உள்ள பெண்கள் உடல் தெரியாத வகையில் ஆடை அணிவதால்தான் பாலியல் குற்றங்கள் குறைவாக உள்ளன என்று மத்தியபிரதேச உள்துறைஅமைச்சர் பாபுலால் கூறியுள்ளார். சமீபத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த உள்துறை அமைச்சர் பாபுலால் கௌர் சென்னை சென்றிருந்தார், பின்னர் அங்கிருந்து போபால் திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறது.

இதற்கு முக்கியக் காரணம், சென்னை பெண்கள் உடல் தெரியும்படி உடை அணிவதில்லை. மாறாக முழுமையாக உடலை மறைக்கும் வகையிலான உடைகளை அணிகிறார்கள். கடவுள் பக்தி மிக்கவர்களாக உள்ளனர். பயபக்தியுடன் கோவிலுக்கு தினசரி போகிறார்கள்.

எனவேதான் மத்திய பிரதேச தலைநகர் போபாலுடன் ஒப்பிடுகையில் தமிழகத் தலைநகரில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைவாக உள்ளன.

சென்னையில் 2012ம் ஆண்டில் பதிவான பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 19.32 சதவீதம்தான். ஆனால் போபாலில் இது 71.38 ஆக இருந்தது. மேலும் ஒட்டுமொத்த மத்தியப் பிரதேசத்திலும் அது 71.38 சதவீதமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

By True Tamil

ஜனவரி 20, 2014
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு