‘சொர்க்கம் என் கையில்’ என்ற படத்தைத் திரையிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த இந்து தர்மா சக்தி அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: “சொர்க்கம் என் கையில்’ என்ற தமிழ் திரைப்படம் குறித்த விளம்பரத்தைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.
அதில் ஹிந்து துறவி ஒருவர், ஆபாச உடையணிந்த நான்கு பெண்களுடன் இருப்பது போன்ற படம் வெளியிடப்பட்டுள்ளது. இது, இந்து மத ரீதியாக பாதிப்பைப் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. காவி அணிந்த இந்து சன்னியாசிகள், ஒழுக்கத்துக்கு மாறாகவும், சட்ட விரோதமாகவும், நேர்மையில்லாத செயல்களில் ஈடுபடுவர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தணிக்கைக் குழுவுக்கும் பட நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
![]()

