‘ஜெ’ மீது சுப்ரமணியசாமி தொடர்ந்த வழக்கில் சிறையில் அடைப்பு!

js

செப்-27, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு இரவு உணவாக ஒரு களி உருண்டை, 200 கிராம் அரிசி சாதம் , 200 கிராம் சாம்பார் வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு சிறையில் 7402 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.

1. 4 வருடம் சிறை என்பதால் ஜெயலலிதா ஜாமீனில் வர முடியாது
2. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி அபராதம்
3. 4 வருடம் சிறை என்பதால் ஜெயலலிதாவுக்கு முதல்வர் பதவி பறிபோனது

அங்கே இப்படியிருக்க நாளை தமிழக முதல்வர் யார் என்ற முறையில் அடுத்த நகர்வுப் பற்றிய அலசலில் அக்கட்சியினர் ஈடுபட உள்ளனர். இதற்குப் பிறகு தமிழகம் எந்தப் பாதையில் செல்லும் என்பது தெரியவில்லை.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சிறிய கலவரத்துடனும் பதட்டத்துடனும் இருந்தது. பிறகு காவல் துறையின் கட்டுக்குள் வந்து அமைதிக்கு திரும்பியது.

வழக்கை பற்றிய குறிப்பு:

1996-ல் தொடரப்பட்ட ஜெ.சொத்துக்குவிப்பு வழக்கை 14 நீதிபதிகள் இதுவரை விசாரித்துள்ளனர். 1996 மே முதல் 2000-மாவது ஆண்டு மார்ச் வரை நீதிபதி சம்பந்தம் வழக்கை விசாரித்தார். 2000-ஏப்ரல் முதல் 2002 ஏப்ரல் வரை நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் விசாரணை நடத்தினார். 2002 மே முதல் 2002 ஜுலை வரை நிதிபதி அன்பழகன் விசாரித்தார். 2002 ஆகஸ்ட் முதல் 2004 ஜனவரி வரை வழக்கை நீதிபதி ராஜமாணிக்கம் விசாரித்தார். 2004 பிப்ரவரி முதல் 2004 ஏப்ரல் வரை நீதிபதி மதிவாணன் வழக்கை விசாரித்தார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு