தனுசுடன் விஜய் சேதுபதி நடிக்கும் படம்

dhanush-vijaysethupathy

இப்போது இருக்கும் இளைய தலைமுறை நடிகர்களில் நம்பிக்கை அளிப்பதில் நடிகர் விஜய் சேதுபதி குறிப்பிடத்தக்கவர். இவருக்கு தற்போது கால்சீட் கொடுக்குமளவுக்கு நேரமில்லை என்பது அவரே தன்னடக்கத்துடன் சொன்ன தகவல்.

இந்நிலையில் நடிகை ராதிகாவின் “ராடன் நிறுவனம்” மற்றும் லிஸ்டின் ஸ்டீபனின் “மேஜிக் பிலிம் புரொடக்ஷன்ஸ்” ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளனர். உண்மைக் கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படத்தில் தனுஷும் விஜய் சேதுபதியும் எதிரும் புதிருமாக கதாப்பாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

தனுஷ்-விஜய் சேதுபதி இருவரும் இணையும் முதல் படம் இது. தற்போது “புறம்போக்கு” படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து நடித்துவரும் ”விஜய் சேதுபதி” தனுஷுடன் நடிப்பதில் இன்னும் புகழ் வாய்ந்த நடிகராக உள்ளார்.

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார் என்றும் இந்த படத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் வரும் பொங்கல் தினத்தன்று வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

By True Tamil

டிசம்பர் 21, 2013
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு