தமிழகத்தில் முதல் முறையாக பெண் வாக்காளர்கள் அதிகம்! – பிரவீன் குமார்!

election-ladies

சென்னை:10.04.2014 வியாழன்.
முதல் முறையாக தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் குமார், தமிழகத்தில் இந்த தேர்தலில் தான் முதல் முறையாக ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர் என்று கூறினார்.

மேலும் 2 கோடியே 75 லட்சத்து 21 ஆயிரத்து 570 பெண் வாக்காளர்களும், 2 கோடியே 75 லட்சத்து 8 ஆயிரத்து 336 ஆண் வாக்காளர்களும் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அதன்படி, ஆண்களை விட 13,234 பெண் வாக்காளர்கள் தமிழகத்தில் அதிகமாக வாக்களிக்க உள்ளனர்.

ஏப்ரல் 24ம் தேதி தமிழகத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ஒட்டு மொத்தமாக 5.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் வேட்பாளர்கள் உட்பட தமிழக தேர்தலில் பெண்களின் களமும் பங்கும் அதிகம் என்பது தெரிகிறது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு