தலிபான்கள் மிரட்டலால் மாலலா புத்தக வெளியீடு ரத்து

malala

பெஷாவர்: தலிபான்கள் மிரட்டல் காரணமாக பாகி்ஸ்தானை சேர்ந்த மாலலாவி்ன் புத்தகவெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் பெஷாவர் பல்கலை கழகம் சார்பில் மலாலா எழுதிய நான் மலாலா என்ற புத்தக வெளியீட்டு விழா பல்கலைகழகம் சார்பில் நடத்தப்பட இருந்தது.

இவ்விழாவை நடத்தக்கூடாது என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பல்கலைகழகத்தின் இம் முடிவிற்கு விழா ஏற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விழா அமைப்பாளர் காதிம் ஹூசைன் கூறியதாவது: தக்க பாதுகாப்பு வழங்க முடியாத காரணத்தால் விழாவை ரத்து செய்யும் படி போலீசார் தெரிவித்து வருகி்னறனர். இருப்பினும் விழா திட்டமிட்டபடி நடத்தப்படும் என கூறினார்.

By True Tamil

ஜனவரி 29, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு