திருட்டு பட்டம் கட்டியதால் 6–வது மாடியில் இருந்து குதித்த சிறுவன் காயத்துடன் உயிர் தப்பினான்

pakistan

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் வசிப்பவர் டாக்டர் மின்ஹால். இவர் தனது சொந்த கிராமத்தில் இருந்து ஹரிஷ்குமார் (12) என்ற இந்து சிறுவனை அழைத்து வந்து வீட்டுவேலைக்கு வைத்திருந்தார். இந்நிலையில் பணத்தை திருடி விட்டதாக கூறி சிறுவன் ஹரிஷ்குமாரை பிடித்து வைத்து, வீட்டு உரிமையாளரும், அவருடைய மனைவியும் விசாரித்தனர். இவர்களிடம் இருந்து தப்பிக்க சிறுவன் 6–வது மாடியில் இருந்து குதித்தான்.

என்றாலும் அவன் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறான். இச்சம்பவத்தையொட்டி மின்ஹாலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சிறுவன் ஹரிஷ்குமார் அளித்த வாக்குமூலத்தில், ‘வீட்டில் இருந்து பணம் எதையும் திருடவில்லை’ என்று கூறினான். இதுபற்றி அவனுடைய நண்பன் கூறுகையில், ‘அவனை வீட்டுக்காரர் அடித்து உதைப்பது வழக்கம்’ என்கிறார். இது தொடர்பாக பிடிபட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்பினர் குரல் கொடுத்து வருகிறார்கள்.

By True Tamil

ஜனவரி 20, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு