தோல்வியில் முடிந்த ஸ்மித்தின் கிரிக்கெட் வாழ்கை!

Graeme Smith: South Africa captain to retire from internationals

மார்ச் 06: கேப்டவுனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி போராடி தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் தென் ஆபிரிக்க கிரிக்கட் அணியின் தலைவர் கிரஹம் ஸ்மித் சர்வதேச கிரிக்கெட்லிருந்து நேற்று ஓய்வுபெற்றர்

தனது வாழ்க்கையில் மேற்கொண்ட முடிவுகளில், இது மிகவும் கடினமான ஒன்றென கிரஹம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கணுக்காலில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை காரணமாகவே, அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த சத்திர சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஒக்டோபர் மாதம் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் 234 அடித்ததுடன் பின் ஸ்மித் இதுவரை எந்தவொரு சதத்தையோ, அரைச் சதத்தையோ எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

33 வயதான கிரஹம் ஸ்மித் 117ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். அவர் இதுவரை 109 போட்டிகளில் அணித் தலைவராக செயற்பட்டுள்ளார். இதுவொரு உலக சாதனையாக கருதப்படுகின்றது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 9,257 ஓட்டங்களை பெற்றுள்ள ஸ்மித், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 6,987 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

கிரஹம் ஸ்மித் தனது 22வயதில் தென்னாபிரிக்க அணியின் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.

தென் ஆபிரிக்க அணியின் அணித்தலைவர் பொறுப்பை மிகக் குறைந்த வயதில் வகித்தவர் என்ற பெருமைக்கு கிரஹம் ஸ்மித் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு