நடிகை குஷ்பு கார் மீது பஸ் மோதியது காயமின்றி தப்பினார்

kushboo

சென்னை: நடிகை குஷ்புவின் கார் மீது, பஸ் மோதிய விபத்தில், அவர் காயமின்றி தப்பினார். சென்னை, பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்து, நடிகை குஷ்பு நேற்று முன் தினம் காரில், நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றார். சிக்னலுக்காக சாலையில் நின்ற போது, வேகமாக வந்த மாநகர போக்குவரத்து கழக பஸ், காரின் மீது மோதியது. இதில், காரின் பின்புறம், பம்பர், விளக்கு உள்ளிட்டவை நொறுங்கின.

காரின் அடிபாகத்தில், சில பகுதிகள் சேதமடைந்தன.அதிர்ச்சியடைந்த குஷ்பு, இறங்கி வந்து அரசு பஸ் டிரைவரை கோபம் கொப்பளிக்க பார்த்த நிலையில், கார் செல்வதற்கு, ‘கிரீன் சிக்னல்’ விழுந்தது. உடனடியாக, காரில் ஏறிய குஷ்பு, அங்கிருந்து சென்றுவிட்டார்.விபத்து தொடர்பாக, போலீசில் புகார் ஏதும் அவர் தெரிவிக்காததால், விபத்து தகவல் வெளியில் வரவில்லை.இந்நிலையில், குஷ்பு தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில், இந்த விபத்து குறித்து, தெரிவித்துள்ளார்.அதில், ‘பஸ் டிரைவரிடம், ‘ஏன் மோதினீர்கள்?’ என கேட்டால், எனக்கு அட்வைசும், எச்சரிக்கையும் கொடுத்துவிட்டு போவார். விபத்து குறித்து புகார் செய்தால், அவருக்கு சங்கம் துணைக்கு வரும். இதனால், புகார் கொடுக்கவில்லை. எனக்கு, இந்த ஆடி கார், என் கணவர் சுந்தர்.சி, பரிசாக தந்தது. விபத்தில் எனக்கு காயம் ஏற்படவில்லை’ என, தெரிவித்துள்ளார்.

By True Tamil

ஜனவரி 29, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு