நாட்டு மக்கள் நலனுக்காக ரஜினி திருப்பதில் சாமி தரிசனம்

rajinikanth1

சூப்பர் ஸ்டார் ரஜினி ஏழுமலையானின் தீவிர பக்தர். ஒரு படம் ரிலீசுக்கு முன்பும், அந்தப் படம் வெற்றி பெற்ற பிறகும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் அவர் உடல்நலம் குன்றியபோது அவரது மனைவி லதா திருப்பதி கோவிலுக்கு முடிகாணிக்கை செலுத்தினார். தற்போது இன்னும் ஒரு சில மாதங்களில் கோச்சடையான் ரிலீசாக உள்ள நிலையில் ரஜினி நேற்று (ஜனவரி 23) இரவு காரில் திருப்பதி சென்றார். அவருடன் மகள் ஐஸ்வர்யாவும் உடன் சென்றார்.

கோவிலுக்கு வந்த ரஜினி வி.ஐ.பி தரிசனத்தில் நின்று சாமி கும்பிட்டார். பின்னர் வெளியில் வந்து தங்க கொடிமரத்தை தொட்டு வணங்கினார். கோயிலுக்குள் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் அவருக்கு வேத ஆசீர்வாதம் செய்யப்பட்டது. கோவில் பிரசாதங்களையும் பக்தியுடன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் வெளியில் வந்த ரஜினியை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். சுற்றி நின்று வருகிற பாராளுமன்ற தேர்தலில் மோடியை ஆதரிப்பீர்களா? தமிழ் நாட்டில் யாருக்கு ஆதரவு? கோச்சடையான் தாமதம் ஏன்? அடுத்து படம் என்ன? என பல கேள்விகளை கேட்டனர். எல்லாவற்றையும் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட ரஜினி, சுவாமி தரிசனம் நல்ல முறையில் நடந்தது. நாட்டில் உள்ள அனைவரும் நலத்துடன் வாழ அருளும்படி சுவாமியிடம் வேண்டிக் கொண்டேன் என்று மட்டும் சொல்லிவிட்டு மகளுடன் காரில் ஏறி பறந்தார்.

By True Tamil

ஜனவரி 24, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு