முன்னதாக காலையில் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு புறப்பிட்ட நடிகர் விஷால், இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

முன்னதாக தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்ற விஷால், அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நான் அரசியல்வாதி அல்ல. மக்கள் பிரதிநிதியாகவே இந்த தேர்தலில் மனு தாக்கல் செய்ய உள்ளேன். எனக்கு பின்னால் யாரும் கிடையாது. மக்களின் தைரியம் தான் எனக்கு ஆதரவு. அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என ஆர்.கே.நகர் மக்கள் விரும்புகின்றனர். யாருடைய வாக்கு வங்கியையும் பிரிப்பதற்காக நான் தேர்தலில் போட்டியிடவில்லை. 100 சதவீதம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. ரஜினி, கமல் என யாரிடமும் ஆதரவு கேட்க மாட்டேன் என்றார்.

தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கும் சென்று விஷால், மரியாதை செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Loading