நான் சிகப்பு மனிதன் – ஒரு பார்வை!

naan-sigappu-manithan

ஏப்ரல் 12, பாண்டிய நாடு என்ற வெற்றியை அடுத்து விஷால் தயாரித்து நடித்து வெளிவந்திருக்கும் படம் நான் சிகப்பு மனிதன். லட்சுமி மேனனின் முத்தகாட்சி வேறு இருப்பதால் மிகுந்த எதிர்ப்பர்ப்புகளுக்கிடையே வெளிவந்துள்ளது ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா!? இதோ பார்ப்போம்…

சமர் படத்திற்குப் பிறகு இயக்குநர் திருவின் இயக்கத்திலும், பாண்டிய நாடு வெற்றிக்குப் பின் விஷாலின் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம், நான் சிகப்பு மனிதன். தீராத விளையாட்டுப்பிள்ளையாக இருந்த விஷால் திருந்தி, பாண்டியநாட்டில் வெற்றிக்கொடி நாட்டியபின் வரும் படம் என்பதாலும், “உதட்டோடு உதடு” முத்தக்காட்சி இருக்கிறது என்பதாலும் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு. எப்படி இருந்தது படம் என்று பார்ப்போம், வாருங்கள்.

படத்தினை இயக்கியிருப்பவர் திரு. இசை ஜி.வி.பிரகாஷ்குமார். பாடல்கள் பரவாயில்லை ரகம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் பெண்ணே பாடல் அருமை. தீராத விளையாட்டு பிள்ளை, சமர் போன்ற படங்களை தொடர்ந்து மூன்றாவதாக விஷாலுடன் இணைந்திருக்கிறார். சமர் படத்தில் வரும் திரைக்கதை டெம்ப் லேட்டில் இப்படத்தையும் கொடுத்திருக்கிறார். அதிலும் நீருக்கு அடியில் கசமுசா செய்து கர்ப்பமாவது எல்லாம் இயக்குனர்களின் இம்சை!

முதல்பாதியில் வெற்றி பெற்ற அவர் இரண்டாம் பாதியில் சறுக்கி விட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் நான் சிகப்பு மனிதன் பட தலைப்பையும் அதிலிருந்து கொஞ்ச கதையையும் உருவி செய்த இந்த மசாலா கலவை, நார்கொலாப்சி என்ற தூக்க வியாதியை இடையில் சொருவி காது குத்தி கடுக்கன் போட்டது. இசையிலும், ஒளிப்பதிவிலும் இருந்த தீவிரம் கதையில் இல்லாததால் நார்கொலாப்சி தூக்கத்திலிருந்து விழித்துகொண்டதோடு கடுக்கன் வலி தாங்காமல் முனகி கொண்டே செல்கின்றனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு